Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் ஏற்பட்ட விரிசல்… கன மழையினால் ஏற்பட்ட சேதம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

வாணியம்பாடியில் கனமழை காரணமாக சாலையில் ஏற்பட்டுள்ள விரிசிலை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகரின் மையப்பகுதி வழியாக பாலாற்றின் கிளை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் அதிகம் கலப்பதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனை தடுப்பதற்காக கனிமவள சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம்  குடியிருப்பு சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்தவர் சிலர் பாலாற்றின் ஓரம் கால்வாய் கட்டகூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் பெய்த கனமழையால் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது புதிதாக தோண்டப்பட்ட கால்வாய்களில் மழைநீர் புகுந்ததால் அதை ஒட்டியுள்ள தார் சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் சிவன் அருள் உத்தரவின்படி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறையினர் ஆகியோர் விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் பாதுகாப்போடு ஏற்கனவே தோண்டியிருந்த கால்வாய் பள்ளத்தை உடனடியாக  மூடுவதற்கான பணி நடைபெற்றுள்ளது.

Categories

Tech |