தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளிலும் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் பெங்காலியை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு சுத்தமாக தமிழ் வராது. இருப்பினும் பாடல் வரிகளை உணர்ந்து பாடி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தவர். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி இருக்க தற்போது இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்ப்பமாக இருந்த இவருக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பதிவில், “எனக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோல் ஒரு மகிழ்ச்சியை என் வாழ்க்கையில் கண்டதில்லை. நானும், என் கணவரும், குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளோம். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.