14வது ஐபில் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது .
இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடரானது , கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டியை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுவதாக முடிவு செய்துள்ளது. இதில் போட்டியில் இடம்பெற்றிருந்த வீரர்கள், அவர்களுடைய சொந்த நாட்டிற்கு சென்று, தங்களுடைய அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளன. அந்தவகையில் ஆர்சிபி அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் ,ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்படவில்லை என்றால், ‘நானே தொடரில் இருந்து பாதியில் விலகி இருப்பேன்’, என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது ஐபிஎல் போட்டியில் நான் விளையாடிக் கொண்டிருந்தபோது, இம்மாத தொடக்கத்தில் என்னுடைய பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
பெற்றோர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், என்னால் போட்டியில் கவனத்துடன் விளையாடி இருக்க முடியாது . என்னுடைய பெற்றோருக்கு மே 3ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது .ஆனால் அடுத்த 2 நாட்களிலேயே ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. ஒருவேளை போட்டி ஒத்தி வைக்காமல் இருந்திருந்தால், ‘நானே போட்டியில் இருந்து விலகி இருப்பேன்’ என்று கூறியுள்ளார். எனவே தொற்றால் பாதிக்கப்பட்ட என்னுடைய தந்தைக்கு ஆக்ஸிஜன் லெவல் குறைந்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பிறகு தற்போது வீடு திரும்பிய அவருக்கு ஆக்சிஜனின் அளவு அதிகரித்து காணப்பட்டாலும் ,கொரோனா பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ என்று தான் முடிவு வந்துள்ளது. இதனால் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைய 10 நாட்கள் ஆகும், என்று சோகத்துடன் சாஹல் கூறியுள்ளார்.