பாஜக அமலாக்கத்துறையினரை வைத்து உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறார்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.அவரை கைது செய்ய CBI மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், எல்லா கட்சிகளும் எல்லாம் மக்களிடம் நேரடியாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்துவார்கள். ஆனால் பாஜகவினர் மட்டும்தான் அமலாக்கத்துறை வைத்து உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறார்கள்.பாஜக அரசுக்கு எதிராக பேச கூடாது என்பதற்காக விடப்படும் அச்சுறுத்தலை ப.சிதம்பரம் சமாளிப்பார் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.