Categories
உலக செய்திகள்

திறந்த வெளி திரையரங்கு… காற்றில் பறந்த மெத்தைகள்…. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் திறந்த வெளி  திரையரங்கில் காற்று பலமாக வீசியதில் மெத்தைகள் பறந்து சென்ற காட்சி வைரலாகி பரவி வருகிறது.  

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரத்தில் படுக்கை வசதியுடன் கூடிய திறந்த வெளி திரையரங்கு ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் கடந்த சனிக்கிழமையன்று  பிற்பகல் நேரத்தில் பலமாக காற்று வீசியது. இதனால் அங்கு படம் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் அனைத்தும் காற்றில் பறந்து ஒடத்  தொடங்கின.

Image result for View of numerous mattresses flying in the US state of Colorado has gone viral on social circles

இதனைகண்ட பொதுமக்களில் சிலர் பறந்து சென்ற மெத்தைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த காட்சியை ரோப் மானீஸ் என்பவர்  படம் பிடித்து தனது யூ-டுயூப்பில் பதிவேற்றம் செய்ய  அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிவேகமாக வைரலாகி பரவி வருகிறது.

https://www.facebook.com/10NewsFirst/videos/2552565888363295/

Categories

Tech |