Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் படிப்போருக்கு ஏராளமான வேலைவாய்ப்பு… அமைச்சர் பாண்டியராஜன்..!!

கலை இலக்கியம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை தொடங்கியது. இந்தப் பட்டறையில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் இணையதளம் மூலம் தகவல்களை பரிமாற தொடங்கிய பிறகு தாய் மொழி பயன்பாடு குறைந்து வருகிறது என்றார். மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 2001- 2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் தமிழில் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Image result for அமைச்சர் பாண்டியராஜன்

அதே வேளையில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். உலக அளவில் 3 ஆயிரம் மொழிகள் அழியும் நிலையில் இருப்பதாக unesco ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மொழியின் வளர்ச்சிக்கு புதிய சொற்கள் அவசியம் என்றார்.

Image result for அமைச்சர் பாண்டியராஜன்

உலக அளவில் எந்த மொழிச் சொற்களாக இருந்தாலும் அதற்கு இணையான ஆங்கிலச்சொல் உடனடியாக அறிமுகம் ஆகிறது  என்று தெரிவித்த அவர், தமிழிலும் புதிய சொற்கள் உருவாக்கும் முயற்சியாக புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா? என்ற கேள்வி பலரிடம் உள்ளது,  கலை இலக்கியம் படித்தவர்களுக்கு படைப்புத் திறன் சார்ந்த கலைத் துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக அவர்  குறிப்பிட்டார்.

Categories

Tech |