தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை இல்லாமல் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிகள் மருத்துவமனையின் தரத்தைப் பொறுத்து 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் , ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி சிகிச்சைக்கு 15000, வெண்டிலேட்டர் வசதி கொண்ட சிகிச்சைக்கு 30 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 18004253993, 104 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.