தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை நான்கு டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்று உள்ளது. அதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 2 முறையும், டுட்டி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகியவை தலா ஒரு தடவையும் டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இதனையடுத்து ஐந்தாவது டிஎன்பிஎல் போட்டி கடந்த ஆண்டு ஐபிஎல் முடிந்த பிறகு டிசம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் போட்டியை நடத்த முடியவில்லை. அதனால் போட்டி ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு போட்டியை நடத்துவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது.
இந்நிலையில் டிஎன்பிஎல் தொடரில் 5வது சீசன் ஜூன் 4 முதல் ஜூலை 4 வரை நடைபெற இருந்தது. ஆனால் தமிழகத்தில் கொரோனாவால் காரணமாக ஏற்கனவே இருந்த ஊரடங்கு, மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊரடங்கில் தளர்வு செய்யப்படும்போது டிஎன்பிஎல் தொடரை நடத்துவது குறித்து யோசிக்கபடும். அதுவரை தொடர் ஒத்திவைக்கப்படுகிறது. அரசிடம் கலந்து ஆலோசித்த பிறகு போட்டி குறித்த புதிய அட்டவணை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.