Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பேருந்துகள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மே 24-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதனால் வெளியூரில் தங்கி உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக இன்று  தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை ஆகிய முக்கிய நகரங்கள் இடையே 3000 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இன்றும் நாளையும் 1500 பேருந்துகள் இயக்கப்படும். இந்த அறிவிப்பை தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து இன்று இரவு 11.45 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மேலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்படும். முழு ஊரடங்கு அறிவிப்பை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

Categories

Tech |