நெல்லையில் கொரோனா பேரிடர் உதவிக்கான மையத்தை காவல்துறை அதிகாரி திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் கொரோனா பேரிடர் உதவிக்கான மையம் திறக்கப்பட்டது. இதனை அப்பகுதியினுடைய காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரான ராஜேந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் இதில் ஏராளமான அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதன்பின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும், கபசுர குடிநீருக்கான பொடியும் வழங்கப்பட்டது.