சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக கரடிசித்தூர் கிராமத்தில் வசிக்கும் கல்யாணி, அதே பகுதியில் வசிக்கும் வீராசாமி, அண்ணாமலை, சக்கரபாணி, அவரது மனைவி மாசிலாமணி என மொத்தம் 5 பேரை சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 95 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.