உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சேனாதிபதி பகுதியில் 70 வயதுடைய மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே மாணிக்கத்திற்கு உடல்நிலை சரி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மாணிக்கம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிக்சை பெற்று உள்ளார். ஆனாலும் இவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாணிக்கம் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மயக்கிய நிலையில் கிடந்த மாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவருக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.