Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு விடுமுறை – மகிழ்ச்சி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் நீட்டித்து ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் காவலர்கள் பங்களிப்பு முக்கியத்தும் வாய்ந்தது.

இந்நிலையில் தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தொற்று உறுதியாவதன் காரணமாக சுழற்சி முறையில் 20% காவலர்களுக்கு விடுப்பு வழங்க காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். மேலும் தளர்வுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்குகிறோம் என்ற பெயரில் நகர் முழுவதும் தேவையின்றி சுற்றக்கூடாது. அந்தந்த பகுதிகளிலேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளவும் என மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |