நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே பகுதி நேர ஊரடங்கு அமல்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,046 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த பகுதிநேர ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எப்போதும்போல அத்தியாவசிய சேவைகள் தடையின்றித் தொடரும் என்றும் அறிவித்துள்ளது .