நடிகை நஸ்ரியா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை நஸ்ரியா ‘நேரம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியா தமிழில் மட்டுமல்லாது மலையாள மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இதன் பின் இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.
🐹
Just got outta ma pjs today ….#fridayvibes #mirrorselfie #lockdownselfies pic.twitter.com/y5tHytZ556— Nazriya Nazim Fahadh (@Nazriya4U_) May 22, 2021
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா டிரான்ஸ் படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் நடிகை நஸ்ரியா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த அழகிய புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.