Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : போட்டியில் பங்கேற்க இந்திய அணி துபாய் சென்றது …!!!

துபாயில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்பதற்காக இந்திய அணி, துபாய்க்கு  சென்றுள்ளது.

துபாயில் நடைபெற உள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி வீரர்களான விகாஸ் கிருஷ்ணன், ஆஷிஸ் குமார் உட்பட 10 வீரர்களும், 6 முறை உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மேரிகோம் ,சிம்ரன்ஜித் கவுர் உட்பட 10 வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்றுள்ளன. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக துபாய் சென்றுள்ளனர்.  இந்தியாவில் கொரோனா பரவல்  காரணமாக, இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் விமானங்களுக்கு, அந்நாட்டு அரசு தடை விதித்தது .எனவே நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி பெற்றுத்தான் இந்திய விமானங்கள் வர முடியும்.

இதனால் அனுமதி விஷயத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் விமானம் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர், வீராங்கனைகள் 2 முறை கொரோனா  பரிசோதனை முடிந்த பின், துபாயில் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர் என்றும், அனைத்து அனுமதிகளும் முறையாக பெற்று தான்,  இந்திய அணியினர் துபாய்க்கு சென்றுள்ளதாகவும் இந்திய குத்துச்சண்டை சம்மேளம் விளக்கமளித்துள்ளது. அத்துடன் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்பதற்கு உதவியாக இருந்த ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பு, இந்திய தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டதில் , இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 23 வயதான வினோத் தன்வாருக்கு தொற்று  உறுதியானதால் , அவர் கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகினார்.

Categories

Tech |