சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அடுத்தடுத்து மூன்று பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள யுன்னான் மாகாணத்தில் இருக்கும் யாங்பி என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவில் பதிவாகியிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து டாலிக் என்ற பகுதியிலும் இரவு 8 மணியளவில், 6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் குங்கைய் என்ற மாகாணத்தில் 7.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதில் மூன்று நபர்கள் பலியானதாகவும், 27 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது வரை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் சீனா எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.