இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருடத்திற்கு 2 அல்லது 3 புயல் உருவாகுகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளும் ஏராளம். அதன் காரணமாக மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எப்போது வேண்டுமானாலும் புயல் வரலாம் என்ற அச்சத்தில் கரையோர மக்கள் வீடுகளில் தங்குவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். இதற்கு அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மக்கள் அச்சத்தில் தான் உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் வரும் ஆண்டில் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளுக்கு நாள் புவி வெப்பமயமாதல் காரணமாக புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் புயல் கரையை கடக்கும் இடங்களில் தடுப்பு சுவர் அமைப்பதன் மூலம் பெரிய பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர். அதனால் அரசு புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.