ராதே ஷ்யாம் படத்தில் மீண்டும் ஒரு டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது . மேலும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கியுள்ள பிரபல நிறுவனம் ராதே ஷ்யாம் படத்தில் மற்றுமொரு டூயட் பாடல் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ஒரு காதல் பாடல் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஊரடங்கு முடிந்த பின் மீண்டும் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் இன்னொரு டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.