Categories
உலக செய்திகள்

நல்ல உடல் நலத்துடன் உள்ளார்..! வீட்டுக்காவலில் உள்ள தலைவர்… மியான்மரில் வெளியான முக்கிய தகவல்..!!

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மியான்மரில் வீட்டு காவலில் உள்ள ஆங் சாங் சூச்சி உடல்நிலை குறித்து தற்போது ராணுவ ஆட்சிக்குழு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மியான்மர் ஆட்சிக்குழு தலைவர் ஜெனரல் ஆங் ஹலாய்ங் பிப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் முதன் முறையாக ஹாங்காங்கின் பீனிக்ஸ் தொலைக்காட்சியுடனான நேர்காணலில் 2 மணிநேரம் பங்கேற்று பேசியுள்ளார். ஆனால் இன்னும் முழு நேர்காணல் ஒளிபரப்பப்படவில்லை. அதேசமயம் சமூக ஊடகங்களில் மே 22 அன்று நேர்காணலில் வெளியான சில காட்சிகளில் மியான்மர் ஆட்சிக்குழு தலைவர், ஆங் சாங் சூச்சி பற்றி தகவல் தெரிவித்துள்ளார். அதில் அவர் ஆங் சாங் சூச்சி அவருடைய வீட்டில் உடல் நலத்துடன் இருக்கிறார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் சில நாட்களில் ஆஜர்படுத்த உள்ளார் என்று ஜெனரல் ஆங் ஹலாய்ங் கூறியுள்ளார். பிப்ரவரி 1 ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர் மியான்மர் ராணுவம் ஆங் சாங் சூச்சி உட்பட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல தலைவர்களையும் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சி மீது மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சி மே 24-ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |