Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர்… பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்… கோவை மருத்துவமனையில் பரபரப்பு…!!

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 108 ஆம்புலன்ஸ் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து டாக்டர்களின் பரிந்துரையின் படி ஆக்சிஜன் வசதியோடு அந்த பெண்ணை ஆம்புலன்சில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை இல்லாததால் அந்தப் பெண் சுமார் 3 மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்தார். இதனை அடுத்து ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்த பிறகு 2- வதாக மற்றொரு ஆக்சிஜன் சிலிண்டரை அந்த நோயாளிக்கு வழங்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் ஊழியர் உடனடியாக நோயாளியை மீட்டு சிகிச்சை வார்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆம்புலன்சில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இவ்வாறு தீ பற்றியவுடன் ஊழியர் உடனடியாக பாதிக்கப்பட்டவரை காப்பாற்றியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |