Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துரத்தி பிடித்த பொதுமக்கள்… இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் பட்டாளம் பகுதியில் ஆறுமுகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஈ.சி.ஜி சிகிச்சை பிரிவில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு யமுனா மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து யமுனா தனது மொபட்டில் பர்னபி சாலையை கடக்க முயற்சிக்கும் போது, எதிரே வேகமாக வந்த கார் யமுனாவின் மொபட் மீது மோதி விட்டது. இதனையடுத்து பலத்த காயமடைந்த யமுனாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஓட்டுநரை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். இதற்கிடையில் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யமுனாவிற்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கீழ்ப்பாக்கம் பகுதியில் வசிக்கும் அப்துல் கவுஹீம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |