மூதாட்டியின் வீட்டில் நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் ஞானாம்பாள் என்ற 104 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இரவு தனியாக படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி கண்விழித்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டி பீரோவை பார்த்த போது அதில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 17 பவுன் தங்க நகை மற்றும் சொத்து ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மூதாட்டி உடனடியாக திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.