நடிகர் விவேக் சினிமா வாழ்க்கைக்கு வந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில் முதன்முறையாக கமலுடன் இணைந்து நடிக்கிறார்.
பிரபல காமெடி நடிகரான விவேக் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா வாழ்க்கையில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வந்தார். அவர் நடிகர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா,தனுஷ் உள்ளிட்ட பல தமிழக சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட உலக நாயகன் கமலுடன் இணைந்து நடித்ததே இல்லை.
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல் உடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் கமலுடன் விவேக் நடிக்கிறார். மேலும் இவருடன் பிரபல பிரபலங்களான rakul preet singh, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளும் இணைந்து நடிக்கின்றனர். இவற்றின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.