ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை லொஸ்லியா தமிழில் அழகாக பாடி சக போட்டியாளர்களிடம் பாராட்டை பெற்றார்.
தமிழில் அனைவரையும் கவரும் கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வனிதா மீண்டும் உள்ளே சென்றபிறகு விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 58ஆம் நாளான இன்று பிக்பாஸ் குழந்தைகள் போல் நடிக்க வேண்டும் என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளார்.
அதன்படி, அனைவரும் குட்டி குழந்தைகள் போல நடித்து வருகின்றனர். இதில் ஷெரின், தர்ஷன், losliya, சாண்டி உள்ளிட்டோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தத்துரூபமாக கொஞ்சும் அளவிற்கு செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் losliya ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற பிரபல குட்டிஸ் பாடலை தமிழில் அழகாக படித்தார். இது பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. சமூக வலைதளத்திலும் மக்கள் losliyaவை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.