கள்ளக்காதலியுடன் தனியாக இருந்த நேரத்தில் முத்தம் கொடுத்ததை போட்டோவாக எடுத்து அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்ததால் கள்ளக்காதலனை கணவன் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிவண்ணா என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சௌபாக்கியா. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சௌபாக்கியா வீட்டின் அருகிலுள்ள இளைஞருடன் பேசி வந்துள்ளார். அது காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சிவண்ணா காலையிலிருந்து விவசாயத்தை பார்க்க வயலுக்கு சென்ற நேரத்தில் அவருடன் தனியாக உல்லாசமாக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களின் கள்ளத்தொடர்பு கணவனுக்கு தெரிய வரவே மனைவி மற்றும் அந்த இளைஞனை எச்சரிக்கை செய்துள்ளார்.
இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் இருவரும் மீண்டும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு நாள் அப்படி கணவன் வீட்டைவிட்டு வெளியில் சென்ற நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்தபோது சௌபாக்கியா உடன் கள்ளக்காதலன் செல்பி எடுத்து அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளான். இதை பார்த்த சிலர் சிவண்ணாவிடம் காண்பித்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த சிவண்ணா வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை மனைவி கண் முன்னே சரமாரியாக வெட்டி வீழ்த்தியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார், இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.