சீனாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டியில், கலந்து கொண்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கன்சூ மாகாணதில் , பேயின் நகருக்கு அருகே உள்ள சுற்றுலா தளத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவுக்கான மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 172 பேர் கலந்து கொண்டுள்ளனர். சவால் நிறைந்த மலைப்பகுதியில்,நடத்த மாரத்தான் போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆனால் திடீரென்று பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பனிமழை பெய்துள்ளது. அத்துடன் வெப்பநிலையில் தாக்கமும் கடுமையாக குறைந்தது.
திடீரென்று நிலவிய இந்த தீவிர தட்பவெட்ப நிலையால் வீரர்களால், முன்னேற முடியாமல் மாட்டிக் கொண்டனர். இதனால் மாரத்தான் போட்டி நிறுத்தப்பட்டது. திடீரென்று தாக்கிய இயற்கை சீற்றத்தின் காரணமாக, போட்டியில் பங்கேற்ற 21 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக்குழுவினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஓட்டப்பந்தயம் நடைபெற்ற இடத்தில் 20- 30 கிலோ மீட்டரில் இருந்து, திடீரென்று மாறிய வானிலை மாற்றத்தினால் ,ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்ததாகவும் , இதனால் வெப்பநிலை கடுமையாக குறைந்துள்ளது என்று பெயின் நகர மேயர் கூறியுள்ளார்.