Categories
தேசிய செய்திகள்

மருந்து வாங்கச் சென்ற இளைஞனின் செல்போனை உடைத்து… கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர்… வைரலாகும் வீடியோ..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மருந்து வாங்கச் சென்ற இளைஞரை மாவட்ட ஆட்சியரும் காவல் துறையினரும் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சுராஜ்பூரில் சேர்ந்த இளைஞர் செல்போனில் படம் பிடித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா இளைஞரின் செல்போனை கேட்கிறார். செல்போனை இளைஞர் கொடுத்ததும் அதை கீழே போட்டு சேதப்படுத்தி விட்டு அவரையும் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் அந்த இளைஞனை கடுமையாகத் தாக்கினர்.

அதுமட்டுமில்லாமல் காவல்துறையினர் சாலை விதிகளை மீறாமல் அவர் அதிவேகமாக சென்றதாக கூறி அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றதாகவும், மருத்துவ சீட்டை காண்பித்து அந்த இளைஞரை விடாமல் அவர்கள் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

Categories

Tech |