Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் விட்டு கதறிய பிரதமர் மோடி…. பிரபல நடிகை ட்விட்….!!!!

கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி  வாரணாசியில் மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், “கொரோனா இரண்டாவது அலையில் நாம் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனைப்போலவே மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா இரண்டாவது அலை நம்மிடமிருந்து பலரையும் பறித்துக் கொண்டது என்று கூறி பிரதமர் மோடி கண் கலங்கினார். மேலும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து நடிகை கங்கனா ரனாவத், “பிரதமரே நான் உங்கள் கண்ணீரை ஏற்றுக் கொள்கிறேன். கண்ணீர் உண்மையோ பொய்யோ, மற்றவர்களின் துக்கத்தை தெரிந்து அவர்களே மேல் அக்கறை கொண்டு வருந்தும் அளவு மோடி இருக்கிறார். அவரை கிண்டல் அடிப்பவர்கள் உங்கள் அணுகு முறையையும் பார்வையையும் சரியாக மாற்றிக் கொள்ளுங்கள்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |