Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 100 லிட்டர்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கச்சிராபாளையம் காவல்துறையினர் வடக்கநந்தல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சிலர் சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு சாராயம் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் பழனி, ரஜினி, பெரியசாமி மற்றும் முருகன் ஆகிய 4 பேரை சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |