சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப் படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது.
இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் படுக்கை வசதிகளை கொண்ட தற்காலிக மருத்துவமனையும் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக உருவாக்கப்பட்ட 130 படுகைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து அவர் பதிவிட்ட ட்விட்டரில் ஊரடங்கு நாட்களில் மக்கள் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.