Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலதிபர்… லாரி மோதியதில்… சம்பவ இடத்திலேயே பலி…!!

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தொழிலதிபர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனி அருகில் உள்ள காந்தி நகரில் முருகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரபாகரன்(36). இவர்கள் சொந்தமாக தொழில் நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை சாலையில் உள்ள இவர்களது தொழில் நிறுவனத்திற்கு முருகன் மற்றும் அவரது மகன் இருசக்கர வாகனத்தில் தனித்தனியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரி முருகனின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முருகன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது மகன் பிரபாகரன் விருதுநகர் புறநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த கணேசமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |