நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி நாயகன் தினேஷின் நடிப்பில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் லாரி ஓட்டுநராக நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்தி, முனீஷ்காந்த், அனேகா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தென்மா இசையமைப்பில் மெட்ராஸ், கபாலி போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கிஷோர் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்ற கதாநாயகனின் கனவு நிறைவேறுமா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதையாம்.