விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதி முழுவதிலும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முத்தாலம்மன் திடலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும் பேரூராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
இதனை வத்திராயிருப்பு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்துள்ளார். அப்போதும் சுகாதார மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் மற்றும் மகேந்திரன் உள்ளிட்ட பேரூராட்சி குழுவினர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனம் மூலம் கிருமிநாசினியை பேரூராட்சி முழுவதும் தெளித்துள்ளனர்.