Categories
உலக செய்திகள்

சாலையை கடந்து சென்ற மக்கள்.. காரில் வேகமாக வந்து மோதி 5 பேரை கொன்ற நபர்.. சீனாவில் பயங்கரம்..!!

சீனாவில் ஒரு நபர் காரில் வேகமாக வந்து சாலையை கடந்த மக்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சீனாவில் Dalian என்ற நகரில் நேற்று மக்கள் பலர் கூட்டமாக சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது கருப்பு நிற கார் ஒன்று அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இக்கொடூர சம்பவத்தில் 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்திருக்கிறார்.

மேலும் காயங்களுடன் ஐந்து நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து காரை ஓட்டி சென்ற LIU என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அந்த நபர் சம்பவம் நடந்தபோது மது அருந்தவில்லை என்று தெரியவந்திருக்கிறது. ஆனால் காரை மோதி விபத்து ஏற்படுத்த காரணம் என்ன? என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |