Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

புகையிலை விற்ற… 5 கடைகாரர்களை… காவல்துறையினர் கைது செய்தனர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் 5 பெட்டிக்கடைகளில் வைத்திருந்த புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் டவுன் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி மற்றும் செய்யது இப்ராகிம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக 5 பெட்டிகள் கடைகளில் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் சாத்தூர் காமராஜபுரம் 2-வது தெருவில் சத்தியமூர்த்தி என்பவர் வைத்திருந்த மல்லிகை கடையில் 36 புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து கோபாலபுரத்தில் சங்கரன் என்பவர் வைத்திருந்த பெட்டிக்கடையில் இருந்து  36 புகையிலை பாக்கெட்களையும், ஒட்டம்பட்டியில் ராமச்சந்திரன் என்பவர் வைத்திருந்த பெட்டிக்கடையில் இருந்து  33 புகையிலை பாக்கெட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ரெங்கப்பநாயக்கன்பட்டியில் சுந்தரபாண்டி என்பவர் வைத்திருந்த பெட்டிக்கடையில் இருந்து 41 புகையிலை பாக்கெட்களையும், அழகாபுரி கிராமத்தில் கண்ணன் என்பவர் வைத்திருந்த பெட்டிக்கடையில் இருந்து 36 புகையிலை பாக்கெட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் புகையிலை விற்ற அந்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |