Categories
உலக செய்திகள்

நீல நிற கண்களால் பிரபலமான இளைஞர்.. தற்போது கலக்கி கொண்டிருக்கிறார்.. வெளியான தகவல்..!!

பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் சில வருடங்களுக்கு முன் நீல நிற கண்களால் பிரபலமான நிலையில் தற்போது அவர் தேநீர் கடை தொடங்கியுள்ளார். 

பாகிஸ்தானில் இருக்கும் இட்வார் பஜாரில் உள்ள தேநீர் கடையில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் அர்ஷத் கான். இவர் கடந்த 2016 ஆம் வருடத்தில் தன் நீலநிற கண்களால் உலகளவில் பிரபலமானார். அதாவது இவரை பெண் புகைப்படக்காரர் ஒருவர் சந்தித்தபோது அவரின் கண்களால் கவரப்பட்டு, அவரை புகைப்படம் எடுத்திருக்கிறார்.

அதனை அவர் #chaiwala என்று இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் அப்போது வைரலாக பரவியது. இந்நிலையில் அவர் தற்போது இஸ்லாமாபாத்தில் தேநீர் விடுதி ஒன்றை தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, விடா முயற்சியால் தான் வலிமை மற்றும் வளர்ச்சி கிடைக்கும்.

“நான் லண்டனில் இந்த வருட கடைசியில் தேநீர் விடுதியை ஆரம்பிக்கவுள்ளேன். என்னை அனைவரும் அர்ஷத் கான் என்று வெளியில் கூறுமாறு கேட்கிறார்கள்”. எனினும் chaiwala என்பது தான் என் அடையாளம். அதனை மாற்ற மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அவரது தேநீர் விடுதியில் 20 விதமான உணவுகள் உள்ளதாம்.

Categories

Tech |