தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தேவையின்றி வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவ காரணம் மற்றும் இறப்புக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் செல்ல இ-பதிவு கட்டாயமில்லை. இந்நிலையில் மே 25 முதல் தொழிற்சாலை வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்களின் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.