Categories
சினிமா தமிழ் சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘கோமாளி’..!!!

கடந்த வாரம் திரைக்கு வந்த ‘கோமாளி’ திரைப்படம்  நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று சாதனை படைத்து வருகிறது.

வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘கோமாளி’ படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவான இப்படம் முழு நகைச்சுவை கொண்ட படமாக உள்ளது.

Image result for comali movie

இதனால் இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோமாளி தமிழகத்தில் 5 நாள் முடிவில் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியாகும் .

Categories

Tech |