Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தான் மனிதாபிமானம்… உரிமையாளரின் சிறப்பான செயல்… பசியாறும் ஆதரவற்றோர்…!!

பழ கடை உரிமையாளர் வாழைப்பழங்களை ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி-கடலையூர் ரோடு சந்திப்பு பேருந்து நிறுத்தம் பகுதியில் முத்து பாண்டி என்பவர் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஊரடங்கு நேரத்தில் அரசு நெறிப்படுத்திய விதிமுறைகளை பின்பற்றி கடையில் வியாபாரத்தை முடித்த பிறகு ஐந்து வாழைப்பழ தார்களை கடையின் முன்பு தொங்கவிட்டு செல்கின்றார்.

இதனையடுத்து முத்து பாண்டி அதன் அருகிலேயே ஒரு சிலேட்டில் “பழம் இலவசம், பசியெடுத்தால் எடுத்து சாப்பிடவும்” என எழுதியுள்ளார். இவ்வாறாக தொங்கவிடப்பட்ட வாழைப்பழங்களை முதியவர்களும், ஆதரவற்றோரும் எடுத்து சாப்பிடுகின்றனர். மேலும் அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முத்துப்பாண்டியின் பழ கடைக்கு சென்று வாழைப் பழங்களை உண்டு பசியை போக்குகின்றனர்.

Categories

Tech |