சென்னையில் துணை நடிகையை அழைத்து வருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் ஆட்டோவை திருடி சென்றுள்ளார்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ஜாவித் என்பவர் தனது ஆட்டோவை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டோவில் ஏறிய ஒருவர் சாலிகிராமத்திற்கு போகும்படி கூறியுள்ளார். அவரும் சாலி கிராமம் நோக்கி சென்றுள்ளார். சாலிகிராமம் அருகில் வந்ததும் துணை நடிகையை அழைத்து வரவேண்டும் நான் மட்டும் போகிறேன் நீங்கள் வந்தால் அது சரியாக இருக்காது என்று ஜாவித்திடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவரும் நடிகை என்பதால் நம்பி ஆட்டோவை கொடுத்துள்ளார். இதையடுத்து போனவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் பதறிப்போன ஜாவித் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையை அழைத்து வருவதாக கூறி சாமர்த்தியமாக ஆட்டோவை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.