Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவரச உதவிகள் தேவைப்பட்டால்… இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்… மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் ஏதேனும் அவரச தேவைகள் ஏற்பட்டால் காவல்துறை உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என சூப்பிரண்டு அதிகாரி சக்தி கணேசன் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பால் விநியோகம், மருந்துக்கடைகள், நாட்டு மருந்து கடைகள், குடிநீர் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மளிகை பொருட்கள் யாவும் தோட்டக்கலைத் துறை மூலம் வீடுகளுக்கு அருகே வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் என  மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை மீறி வெளியே சுற்றித் திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட சூப்பிரண்டு போலீசார் சக்தி கணேசன் எச்சரித்துள்ளார். மேலும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியமான தேவைகள் அல்லது ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் உடனடியாக நாமக்கல் மாவட்ட காவல்துறை உதவி மையத்திற்கு 9947 17110 மற்றும் 98945 15110 இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும், 24 மணி நேரமும் சேவை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |