Categories
மாநில செய்திகள்

மக்களே..! ப்ளீஸ் சும்மா சும்மா…. வெளிய வர வேண்டாம்…. போலீஸ் விழிப்புணர்வு …!!

மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவை மீறியும் கொரோனா அச்சமின்றியும் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரியும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் நேற்று கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மயிலாடுதுறையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் வாகனங்களில் சுற்றித் திரிவதால் அது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் எமதர்மன், சிவன்  வேடம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வருபவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. பாலமுருகன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

Categories

Tech |