Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில்…. மீண்டும் இணைந்த ரஷித் கான்…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ,லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் ரஷித் கான் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியானது, கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளை ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 20 ம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு  அனுமதி அளித்துள்ளது. இதில்  ஆப்கானிஸ்தான் வீரரான  ரஷித் கானை,   லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால் அவருக்கு பதிலாக வங்காளதேசத்தை சேர்ந்த ஷாகிப் அல் ஹசன்   ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன்  தொடரில் இருந்து விலகியுள்ளதால், மீண்டும் ரஷித் கானை  அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது,  “மீண்டும் லாகூர் அணியுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன் நடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதே உத்வேகத்துடன் நடைபெறும் போட்டியிலும் அணிக்கு உதவுவேன் என்று நம்புகிறேன் ” என்று ரஷித் கான் கூறினார்.

Categories

Tech |