இந்நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் நேற்று இரவு 7.30 மணி முதல் ப.சிதம்பரத்தை தேடி வருகின்றனர். டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று இரவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குழுவினர் அடுத்ததுடுத்ததாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ப.சிதம்பரம் இல்லை என்பதால் அதிகாரிகள் அவரின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி வைத்தனர்.
இந்நிலையில் இன்றும் காலை 4_ஆவது முறையாக ப.சிதம்பரம் இல்லத்துக்கு வந்தனர். காலை வந்த அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இன்று காலை அவரின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வர இருக்கும் சூழலில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் இந்த நடவடிக்கை தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.