தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தேவையின்றி வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவ காரணம் மற்றும் இறப்புக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பைக்கில் இரண்டு பேர் செல்ல தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மக்கள் மருத்துவ தேவை என்றால் மட்டுமே பைக்கில் பின்னால் ஒருவரை அழைத்து வரலாம். அதுவும் பொய்க் காரணம் கூறி கொண்டுவரக் கூடாது. மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.