Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்திய அணிக்கு சாதகமாக …. இருக்கும் மான்டி பனேசர்…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மான்டி பனேசர்  கூறியுள்ளார்.

வருகின்ற ஜூன்  2 ம் தேதி விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகின்றது. இந்த தொடர் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுத்தாம்ப்டனில்  நடைபெறுகிறது. இதன் பிறகு  இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்நிலையில் இந்த 2 டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்  மான்டி பனேசர் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது இங்கிலாந்தில் ஆகஸ்ட் மாதம் நிலவும், தட்ப வெப்ப நிலையானது, இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருப்பதால், இந்தத் தொடரில்5- 0 என்ற கணக்கில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்தத் தொடரில் ஆல் ரவுண்டரான ஜடேஜா வெற்றிக்கு கை கொடுப்பார். ஆனால் ஒருவேளை இந்திய அணியில், ஒரு சுழல்பந்து வீரனுடன் களமிறங்கினால், கண்டிப்பாக ஜடேஜாவை தேர்வு செய்யலாம். என்று  மான்டி பனேசர் கூறியுள்ளார் .

Categories

Tech |