தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி இன்றுடன் முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் தேவையின்றி வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று முதல் ஒரு வார காலத்திற்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே சுற்றுவது தெரியவந்து இரண்டாவது முறையாக வாகனம் பிடிபட்டால் நீதிமன்றம் மூலமாக திருப்பித் தரப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு ஊரடங்கு நேரத்தில் மருந்தகங்கள், பால் பொருட்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.