Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு…. இலவச டிராக்டர் திட்டம்…. டாஃபே நிறுவனம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா  காலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களுடைய விவசாய சம்பந்தமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்காக 90 நாட்களுக்கு, தமிழக அரசு மற்றும் டாஃபே நிறுவனத்தின் ஜெ-பார்ம் ஆகியவை இணைந்து டிராக்டர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்க உள்ளது.

எனவே உழவன் செயலி ஆப் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800-4200-100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு டிராக்டர்களை விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு வாடகைக்கு எடுக்கலாம் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே முதல் ஜூன் மாதம் வரை 50,000 விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |