கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
மதுரையை அடுத்துள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரிடம் ஓட்டுநராக சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தென்னரசு மனைவி விஜயலெட்சுமிக்கும் சரவணனுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது.தனது மனைவிக்கும் சரவணனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதை அறிந்த சரவணன் அவனை வேலையிலிருந்து நீக்கி யுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயலெட்சுமி கடந்த 14-ம் தேதி தனது கணவர் உறங்கிய நேரத்தில் சமயம் பார்த்து காதலுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஆனால் தனது கணவனுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததன் காரணமாக மஞ்சள் காமாலையில் இறந்து விட்டதாக காவல் நிலையத்தில் விஜயலட்சுமி கூறியுள்ளார். ஆனால் விஜயலட்சுமியின் அழுகையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சந்தேக மரணமாக வழக்கு செய்து காவல் துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, பின் விஜயலட்சுமியிடம் உடலை ஒப்படைத்தனர்.
இந்நிலையில் பரிசோதனையில் தென்னரசு தொண்டை எலும்பு உடைந்து இருப்பது தெரியவர, கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். இதையடுத்து அவரது மனைவியிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் காதலனுடன் சேர்ந்து கொன்றதை விஜயலட்சுமி ஒப்புக்கொண்டார். இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலால் கணவனையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.